தமிழ் சினிமா

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இந்தியப் பிரபலங்கள் 100 பேர் பட்டியல் வெளியீடு: தமிழ்ப் பிரபலங்கள் விவரம்

செய்திப்பிரிவு

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இந்தியப் பிரபலங்கள் 100 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் திரையுலகப் பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2019-ம் ஆண்டுக்காகப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியப் பிரபலங்களின் ஆண்டு வருமானம், புகழ் மற்றும் சமூக வலைதளத்தில் உள்ள வரவேற்பு ஆகியவற்றை முன்வைத்து 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 252.72 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி. நடிகர்களில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 293.25 கோடி ரூபாய் வருமான ஈட்டி இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த் 100 கோடி ரூபாய் வருமான ஈட்டி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

16-வது இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், 27-வது இடத்தில் மோகன்லால், 44-வது இடத்தில் பிரபாஸ், 47-வது இடத்தில் விஜய், 52-வது இடத்தில் அஜித், 54-வது இடத்தில் மகேஷ் பாபு, 55-வது இடத்தில் இயக்குநர் ஷங்கர், 56-வது இடத்தில் கமல்ஹாசன், 62-வது இடத்தில் மம்மூட்டி, 64-வது இடத்தில் தனுஷ், 77-வது இடத்தில் இயக்குநர் த்ரிவிக்ரம், 80-வது இடத்தில் இயக்குநர் சிவா மற்றும் 84-வது இடத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பட்டியலை முழுமையாக காண: CLICK HERE

SCROLL FOR NEXT