விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காற்றின் மொழி’ தொடரில், சந்தோஷ் எதிர்கொள்ளும் ஆபத்துகளை மையமாக வைத்து வரும் வாரங்களில் கதை சுழல்கிறது.
வாய்பேச இயலாதவள் கண்மணி. எதிர்பாராத சதியால் அவளது அப்பா லாக்கப்பில் வைக்கப்பட, அவரை அதில் இருந்து எப்படி மீட்கிறாள்? சந்தோஷின் மாமா சதியால் இது நடக்கும் நிலையில், அவரது கெடுபிடியையும் மீறி சந்தோஷ் எப்படி கண்மணிக்கு உதவி செய்கிறான் என்பதாக கதை நகர்கிறது. சந்தோஷ் திடீர் ஆபத்தையும் எதிர்கொள்கிறான். அது எப்படி, யாரால் என்ற சஸ்பென்ஸுடன் வரும் வாரங்களில் காட்சிகள் நகர்கின்றன.
நாயகி கண்மணியாக பிரியங்கா ஜெயின், நாயகன் சந்தோஷ் ஆக சஞ்சீவ் நடிக்கும் இத்தொடரை ராம்குமார் இயக்குகிறார். வாய்பேச இயலாத கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா, தனது கண்ணாலேயே அழகாகப் பேசுகிறார் என்று ரசிகர்கள் வெகுவாக பாராட்டுவதாக சீரியல் தரப்பில் கூறப்படுகிறது.