சிம்பு பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கும் 'LOVE ANTHEM' தொகுப்பை பிப்ரவரி 2016ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
2011ம் ஆண்டு சிம்பு நடித்து, தயாரித்து, பாடல்கள் எழுதி, இசையமைத்த தொகுப்பு 'LOVE ANTHEM'. பிரபல ஆங்கில பாடகர் அகான் சென்னை வந்து சிம்புவுடன் இணைந்து பாடல்களை பாடி இருக்கிறார்.
இந்த வீடியோ தொகுப்பின் பணிகளை மேற்கொள்வதற்கு சிம்பு அமெரிக்கா சென்று வந்தார். ஆனால், அப்பணிகள் முழுமையாக முடியவில்லை. இதனால் எப்போது 'LOVE ANTHEM' வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. சிம்புவும் 'வாலு' வெளியானதைத் தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா', 'கான்', அமீர் படம் என மும்முரமாக படங்களில் நடித்து வருகிறார்.
'LOVE ANTHEM' குறித்து சிம்பு தரப்பில் விசாரித்தபோது, "அத்தொகுப்பில் பாடகர் அகான் பாடியிருப்பது போல, ஒரு பெண் குரலும் இருக்கிறது. இதற்காக ஷகிராவிடம் முன்பே பேசிவிட்டார் சிம்பு. ஷகிராவை சென்னைக்கு அழைத்து வந்து பாட வைப்பதற்கு பொருட் செலவு அதிகம் தேவை. அதனால் தான் 'வாலு' வெளியாகும் வரை காத்திருந்தார்.
'வாலு' வெளியானதைத் தொடர்ந்து அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால் விரைவில் LOVE ANTHEM பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த ஆண்டு முடிவதற்கு முன் அனைத்து பணிகளையும் முடிந்துவிட திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. 2016 பிப்ரவரியில் 'LOVE ANTHEM' வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.
'LOVE ANTHEM'வில் சிம்பு பாடியிருக்கும் பாடல்
</p>