அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருடன் ரஜினிகாந்த். 
தமிழ் சினிமா

ஐயப்பன் பாடல், 'தண்ணிக்குடம்' பாடலுடன் ஒப்பிட்டு இணையத்தில் வைரலாகும் 'சும்மா கிழி' விமர்சனம்

செய்திப்பிரிவு

லைகா நிறுவனத்தின் தயாரிப் பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ரஜினி நடித்துள்ள படம் ‘தர்பார்’. பொங்கல் வெளி யீடாக வரவுள்ள இப்படத்தில் ‘சும்மா கிழி’ என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது. அனிருத் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி யுள்ள இப்பாடல் நேற்று முன் தினம் மாலை வெளியானது. இதில் ரஜினியின் குரலும் இடம்பெற்றிருப்பதால், வெளி யான சில மணி நேரங்களில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், அனிருத் அமைத்த பாடலின் இசையை கிண்டல் செய்யும் வீடியோக் களும் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டிரெண்டிங் ஆகியுள்ளன.

தர்பார் படத்தின் ‘சும்மா கிழி’ பாடல், ஆன்மிக இசைப் பாடகர் ஹரி பாடியுள்ள ‘கட்டோடு கட்டுமுடி.. பள்ளிக் கட்ட சுமந்தபடி’ என்ற ஐயப்பன் பாடல் போலவே இருப்பதாக, அந்த வீடியோ வும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதே போல, ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் எஸ்பிபி பாடி யுள்ள ‘தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா’ என்ற பாடலின் இசைப் பின்னணியில் இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் பலரும் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

பாடலின் வரவேற்புக்கு இணையாக, கிண்டல் விமர் சனங்களும் இணையத்தில் பரவிவருவது ‘தர்பார்’ குழு வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT