தமிழ் சினிமா

1980 நடிகர்கள் சந்திப்பு:  வைரலாகும் புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

சீரஞ்சிவி தலைமையில் இந்தாண்டு 1980-களின் நடிகர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1980-களின் பிரபல நடிகர்கள் பலரும் வருடந்தோறும் ஒன்றாகச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீம், ஒவ்வொரு நடிகரின் மேற்பார்வையில் ஒன்றுகூடுவது எனத் திட்டமிடுவார்கள்.

இந்த ஆண்டின் சந்திப்பு ஹைதராபாத்தில் சீரஞ்சிவி தலைமையில் நடைபெற்றது. இதற்காகப் பல முன்னணி நடிகர்களும் ஒன்று கூடினார்கள். இந்தாண்டு ரஜினி - கமல் கலந்து கொள்ளவில்லை. ரஜினிக்குச் சொந்தப் பணிகள் இருந்ததாலும், கமல் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் அனைத்து நடிகர்களுமே தங்க நிறத்தில் உடையணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி அனைவருமே தங்க நிறத்தில் உடையணிந்து வந்து, தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆடல், பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் சீரஞ்சிவி, மோகன்லால், நாகார்ஜுனா, கே.பாக்யராஜ், பிரபு, ஜெயராம், சுரேஷ், ரகுமான், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, சுமன், ஷோபனா, நதியா, ராதா, அமலா, ரேவதி, ரமேஷ் அரவிந்த், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அனைவருக்குமான விருந்தினை சீரஞ்சிவி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழுமையான புகைப்படங்களைக் காண: CLICK HERE

SCROLL FOR NEXT