தமிழ் சினிமா

திருமணம் தொடர்பாக வதந்தி: யோகி பாபு விளக்கம்

செய்திப்பிரிவு

தனது திருமணம் தொடர்பாக உலவி வரும் வதந்திக்குத் தனது ட்விட்டர் பதிவில் யோகி பாபு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் ஏதேனும் ஒரு படம் வெளியாகும் அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

மேலும், தனக்கு தன் குடும்பத்தினர் தீவிரமாகப் பெண் பார்த்து வருவதாகவும் யோகி பாபு அளித்த பேட்டியொன்றிலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, படப்பிடிப்பு தளத்தில் நடிகை சபீதா ராயுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் யோகி பாபு. இந்தப் படம் வெளியானதால், இணையத்தில் இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

யோகி பாபுவுக்கு திருமணம் என்று பலரும் செய்திகளை வெளியிடவே, இணையத்தில் பலரும் பகிர்ந்து வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இந்த வதந்தி தொடர்பாக யோகி பாபு தனது ட்விட்டர் பதிவில் "என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது யோகி பாபு காமெடியான நடித்து 'தர்பார்', 'ஜகஜால கில்லாடி', 'ஜடா', 'வெள்ளை யானை', 'இருட்டு' உள்ளிட்ட பல படங்கள் தயாரிப்பிலிருந்து வருகிறது.

SCROLL FOR NEXT