தமிழ் சினிமா

விஷ்ணுவின் திருமண வைபவம்!

செய்திப்பிரிவு

விஷ்ணு, ஆயிஷா நடிப்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘சத்யா’.

இதில், தற்போது நடந்துவரும் திருமண வைபவம் தொடர்பான நிகழ்ச்சி, நேயர்களை பரபரப்பாக்கியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, தொடரின் நாயகன் விஷ்ணு கூறியதாவது:

எனக்கும், சத்யாவுக்கும் திருமணம் நடக்குமா? இந்த சந்தேகமும், பரபரப்பும் நேயர்களுக்கு மட்டுமல்லாமல், எனக்குமே இருக்கிறது.

அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சீரியலின் திரைக்கதை நகர்கிறது. இது, ஜீ பெங்காலியின் ‘போகுல் கோத்தா’ என்ற தொடரின் ரீமேக்காக இருந்தாலும், கதையின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, தமிழில் புதிய கோணத்தில் நகர்ந்து வருகிறது.

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘சத்யா’ தொடரின் கதை பிடித்துப்போனதால் அப்படியே ஜீ குழுமத்தின் மலையாளம், தெலுங்கு சேனல்களும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன. இதுவே எங்கள் குழுவுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி.

இந்த வரவேற்பின் காரணமாக, சமீபத்தில் ‘ஜீ குடும்ப விருதுகள்’ நிகழ்ச்சியில் பல விருதுகளும் பெற்றோம். ‘சத்யா’வில் கார் ஷெட், சாலை, தெருவோரக் கடை போன்ற வித்தியாசமான களங்கள் புதிய கதைச் சூழலையும், அனுபவத்தையும் தருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT