ஷாலினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
’நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'வலிமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், படப்பிடிப்பு எப்போது என்பது இன்னும் தெரியாமல் இருக்கிறது.
அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு என படம் தொடர்பான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. போலீஸ் கதை என்பதால் இதில் அஜித் கெட்டப் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
டெல்லிக்கு துப்பாக்கி சுடும் போட்டிக்குச் செல்லும்போது, அஜித் தனது புதிய கெட்டப்பில் பயணித்தார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனிடையே, நேற்று (நவம்பர் 20) அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்த நாளாகும். இதற்காக சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில் ஷாலினியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு அஜித் வந் போது ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. முதலில் முழுக்க டை அடித்திருந்தவர் தற்போது மீண்டும் வெள்ளை முடிக்குத் திரும்பியிருக்கிறார். அதிலும் மீசையை மெலிதாக்கி, அதை நாடி வரை வளர்த்திருக்கிறார். கொஞ்சம் ஃபிட்டாகவும் திரும்பி இருப்பதால், அஜித் ரசிகர்கள் இந்த கெட்டப்பைக் கொண்டாடி வருகிறார்கள்.