தமிழ் சினிமா

முதன்முறையாக இணைந்த விஜய் சேதுபதி - விவேக்

செய்திப்பிரிவு

விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துவரும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஊட்டியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினர். இதில், நாயகியாக மேகா ஆகாஷ், வில்லனாக மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக். விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடிப்பது இதுதான் முதன்முறை. இதுதவிர, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படத்திலும் விவேக் நடித்து வருகிறார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில், விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினையைப் பேசியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT