தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயாருக்கு விருது வழங்கினார் சச்சின்

செய்திப்பிரிவு

நேச்சுரல்ஸ் சலூன் சார்பில், 'மதர்ஸ் ஆஃப் இந்தியா- 2015' நிகழ்ச்சியை முன்னிட்டு, சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின விருதை, ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு வழங்கினார்.

இந்திய சாதனையாளர்களின் அம்மாக்களைக் கவுரவிக்கும் வகையில் 'மதர்ஸ் ஆஃப் இந்தியா- 2015' நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி, மும்பை தாஜ் ஹோட்டலில் கொண்டாடப்படுகிறது. நேச்சுரல்ஸ் சலூன் தனது 500-வது கிளையை மும்பையில் தொடங்குவதை முன்னிட்டு இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின் முன்னோட்டமாக, சிறந்த சாதனையாளரின் தாய்க்கான விருதை, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு சென்னையில் உள்ள அவரின் வீட்டில் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.

அப்போது நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன் நிறுவனத்தின் நிறுவனர் வீணா குமாரவேல் மற்றும் இணை நிறுவனர் குமாரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT