தமிழ் சினிமா

‘கபடதாரி’  படத்தில் பூஜா குமார்!

செய்திப்பிரிவு

சிபிராஜ் நடிப்பில் உருவாக உள்ள ‘கபடதாரி’ படத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தின் வழியே கவனத்தை ஈர்த்த பூஜா குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுதொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது, ‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது இப்படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும். ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதல்களுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்றும் அனுபவத்துக்காக எங்கள் படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT