‘மகாமுனி’ படத்தைத் தொடர்ந்து மகிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ள ‘ஐங்கரன்’, ‘அசுரகுரு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை சிங்கப்பூர் தமிழ் தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டாடிவிட்டு திரும்பியிருக்கிறார் மகிமா. இது குறித்து அவர் கூறியதாவது:
சிங்கப்பூர் அரசாங்கமே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இது. அங்கே தமிழ்நாட்டில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களை வெகுவாக போற்றுகின்றனர்.
அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்த நிகழ்ச்சி இது. என்னுடைய இந்த வருஷ தீபாவளியை சிங்கப்பூரில், அதுவும் தமிழர்களோடு இணைந்து கொண்டாடியதை பெருமையாக நினைக்கிறேன்.
அங்கே இருந்த நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த உற்சாகத்தோடு புதிய மலையாள படமொன்றில் நடிக்க தயாராகி வருகிறேன். இப்படத்தை மம்முட்டி நடித்து வெளிவரவுள்ள ‘மாமாங்கம்’ பட இயக்குநர் பத்மகுமார் இயக்குகிறார். அவரது முந்தைய படங்களைப் போலவே நான் நடிக்கவுள்ள இப்படமும் குடும்பப் படம்தான்! என்றார்.