தமிழ் சினிமா

உன்னுடைய வருகைக்காக நாடே காத்திருக்கிறது சுர்ஜித்: அருள்நிதி

செய்திப்பிரிவு

உன்னுடைய வருகைக்காக நாடே காத்திருக்கிறது சுர்ஜித் என்று அருள்நிதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 67 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு ரிக் இயந்திரம், போர்வெல் இயந்திரம் ஆகியவற்றின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

தற்போது குழந்தை சுஜித் தொடர்பாக நடிகர் அருள்நிதி தனது ட்விட்டர் பதிவில், "ஒட்டுமொத்த நாடும் உன்பக்கம் நின்று உன்னுடைய வருகைக்காகக் காத்திருக்கிறது சுர்ஜித். கடந்த 3 நாட்களாக நீ போராடிக் கொண்டிருக்கிறாய். இன்று நீ காப்பாற்றப்படுவாய் என்று நம்புகிறேன். மீட்புக் குழுவினரின் அயராத முயற்சிக்குத் தலைவணங்குகிறேன். நீ மீண்டும் விரைவில் வருவாய் சுர்ஜித்" என்று தெரிவித்துள்ளார் அருள்நிதி.

SCROLL FOR NEXT