விஜய் - அட்லீ கூட்டணியில் நாளை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அவற்றில், சில கேள்வி - பதில்கள் இங்கே...
கேள்வி: படத்தில் 2 விஜய்யா? 3 விஜய்யா?
அட்லீ: எனக்கு கணக்கு வராது ப்ரோ.
கேள்வி: தீம் மியூஸிக் இருக்கா?
அட்லீ: ராயப்பன், மைக்கேல், பிகில்னு நிறைய தீம் மியூஸிக் இருக்கு ப்ரோ. எதிர்பாராததை எதிர்பாருங்கள்.
கேள்வி: உங்க ஃபேவரிட் கேரக்டர் எது? ராயப்பன்? பிகில்? மைக்கேல்?
அட்லீ: எப்போதுமே ராயப்பன்.
கேள்வி: இந்தப் படத்தில் நயன்தாரா கேரக்டர் பற்றி சொல்லுங்க...
அட்லீ: உணர்வுபூர்வமானவர் மற்றும் உற்சாகமூட்டக் கூடியவர். அவர்தான் படத்தின் தேவதை. என்னுடைய டார்லிங்.
கேள்வி: ஜாக்கி ஷெராஃப்புடன் பணியாற்றிய அனுபவம்?
அட்லீ: ஜாக்கி என்னுடைய நண்பர். உங்கள் மீது மிகப்பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது சார். உங்களுடன் பணியாற்றியது சர்ப்ரைஸான விஷயம்.