இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரிலீஸில் ஏற்கெனவே பலத்த எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ள அட்லீ இயக்கத்தில் வெளியாகும் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்துகான பிரத்யேக எமோஜியை ட்விட்டர் அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கெனவே விஜய்யின் 'மெர்சல்', ரஜினிகாந்தின் 'காலா', சமீபத்தில் பிரபாஸின் 'சாஹோ' ஆகிய படங்களுக்கான எமோஜி வெளியிடப்பட்டது.
இதன் மூலம் 'பிகில்' குறித்த பதிவுகள் #Bigil என்பதில் கால்பந்துடன் ஹீரோ விஜய் இருக்குமாறு எமோஜி காட்டப்படும்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, 'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'சிங்கப்பெண்ணே’ ‘வெறித்தனம்’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே பிரபலமடைந்து படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ட்விட்டர் தளத்தில் #வெறித்தனம், #PodraVediya, #Bigil, #BigilDiwali மற்றும் #தளபதி63 ஆகிய வார்த்தைகளை பதிவிட்டால், விஜய் கையில் ஃபுட்பால் வைத்திருப்பது போன்ற எமோஜியுடன் ட்வீட்டாகி வருகிறது.