விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இதன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, வெளியீட்டுக்குத் தயாரானது. தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவித்தார்கள். ஆனால், 'பிகில்' மற்றும் 'கைதி' ஆகிய படங்கள் தீபாவளி வெளியீட்டில் உறுதியாக இருந்ததால், 'சங்கத்தமிழன்' திரைப்படம் வெளியீட்டில் பின்வாங்கியது.
இதனைத் தொடர்ந்து நவம்பரில் வெளியாகும் என அறிவித்தார்கள். தற்போது நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது கோயம்புத்தூர் விநியோக உரிமையைத் திருப்பூர் சுப்பிரமணியம் கைப்பற்றியுள்ளதாக லிப்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், இதர ஏரியா விற்பனைகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன.