தமிழ் சினிமா

சினிமா பாணியில் ஒரு சீரியல்!

செய்திப்பிரிவு

சன் டிவியில் நாளை முதல் ‘மகராசி’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. முதன்முறையாக ஓடும் ரயிலில் பல காட்சிகள் எடுக்கப்பட்ட இத்தொடரில் பிரவீனா லலிதாபாய், ‘கேளடி கண்மணி’ தொடர் நாயகி திவ்யா, அஸ்வினி நம்பியார் நடிக்கின்றனர். நாயகர்களாக எஸ்எஸ்ஆர் பேரனான எஸ்எஸ்ஆர் ஆரியன், மாடலிங் துறை பிரபலம் விஜய் நடிக்கின்றனர்.

குடும்பம், காதல், வம்பு என சினிமா பாணியில் வலம்வரவுள்ள இத்தொடரை பெரும் பொருட் செலவில் ரிஷிகேஷ், ஹரித்வார், ஹைதராபாத், சிதம்பரம் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளனர். இத்தொடரை ‘பொன்மனம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ’சுறா’ படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்க, 'கட்டப்பாவ காணோம்' பட ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்கிறார்.

SCROLL FOR NEXT