அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லன் யார் என்பது தான் பலரது கேள்வியாக இருந்து வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இறுதியாக மகேந்திரனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
இயக்குநர் மகேந்திரனிடம் பேசிய அட்லீ, படத்தில் வில்லனுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியிருக்கிறார். அனைத்தையும் கேட்டுவிட்டு, 2 நாட்களுக்கு பிறகு நான் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்திருக்கிறார்.