நமது வழக்கமான புரிதலைத் தாண்டி வளர்ந்துள்ள ஒரு ஆன்மா சிம்பு என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவுற்றுள்ளது. இதில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2-வது இடத்தை சாண்டியும், 3-வது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, பலரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
தர்ஷனின் காதலியாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகள் வெளியிட்டு வந்தார். தற்போது 'பிக் பாஸ்' சீசன் 3 முடிவுற்றதைத் தொடர்ந்து சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் சிம்புவைச் சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு குறித்துப் பதிவிட்டு இருப்பதில் கூறியிருப்பதாவது:
நான் பல நடிகர்களின் ரசிகை. ஆனால் எஸ்.டி.ஆருக்கு உண்மையான ரசிகை. எனக்கு அவரை சிறிது காலமே தெரிந்திருக்கலாம். ஆனால் இவரைப் போல அன்பான, தாராள மனம் இருப்பவரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என்று கூற முடியும்.
நமது வழக்கமான புரிதலைத் தாண்டி வளர்ந்துள்ள ஒரு ஆன்மா. ஆனால் எல்லோரையும் தனக்குச் சமமாக, அதே மரியாதை மற்றும் அன்புடன் நடத்துகிறார். எனக்கும் தர்ஷனுக்கும் அவர் தந்த ஊக்கத்தை நம்பவே முடியாது. எங்கள் இருவரின் அன்பும் உங்களுக்கே சிம்பு. தர்ஷனுக்கு, நீங்கள் தந்த ஹீரோ புத்தகம் அன்பளிப்பு பிடித்திருந்தது.
பிக்பாஸில் இதுவரை போட்டியிட்ட பல போட்டியாளர்களின் தொழில் வாழ்க்கையை வடிவமைக்க எஸ்.டி.ஆர் தானாகவே சென்று வழிகாட்டியிருக்கிறார். எஸ்.டி.ஆர், நீங்கள் தான் நான் சந்தித்ததிலேயே மிக உண்மையான நபர். சுத்தமான தங்கம். உங்கள் மீள் வருகையை வரவேற்கிறேன்.
இவ்வாறு சனம் ஷெட்டி கூறியுள்ளார்.