தமிழ் சினிமா

திட்டமிட்டே வதந்தியைப் பரப்புகிறார்கள்: தமன்னா காட்டம்

செய்திப்பிரிவு

திருணம் தொடர்பாகத் திட்டமிட்டே வதந்தியைப் பரப்புகிறார்கள் என்று தமன்னா காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் நாயகிகளாக நயன்தாரா, அனுஷ்கா மற்றும் தமன்னா நடித்துள்ளனர். தமன்னாவின் கதாபாத்திரத்துக்கே வரவேற்புகள் அதிகமாகக் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிப்பில் 'பெட்ரோமாக்ஸ்' அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனத் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து பிஸியாக நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.

இந்த வேளையில், அவருக்கும் தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து அவர் திரையுலகில் கவனம் செலுத்தமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்தச் செய்திக்கு தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருமணச் செய்திகள் தொடர்பாக தமன்னா அளித்துள்ள காட்டமான பதிலில், "தேவையற்ற வதந்திகளைக் கிளப்பிவருகிறார்கள். திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்திலேயே நானில்லை. எனது திருமணம் பற்றி வரும் செய்தி வெறும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளார் தமன்னா.

SCROLL FOR NEXT