டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி சுடுதல் மையத்தில் நடை பெற்று வரும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார். 
தமிழ் சினிமா

டெல்லியில் தேசிய அளவில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கேற்பு

செய்திப்பிரிவு

டெல்லியில் நடக்கும் தேசிய அள விலான துப்பாக்கி சுடுதல் போட்டி யில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார்.

நடிகர் அஜித், ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, நவம் பர் முதல் தனது அடுத்த படத்துக் கான படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளார்.

திரைப்பட பணிகளுக்கு இடையே கார், பைக் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி சுடுதல் மையத்தில் தற்போது நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் அவர் பங்கேற்றுள் ளார்.

நேற்று தொடங்கிய இப்போட்டி 2-வது நாளாக இன்றும் நடக்கிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டி இன்று மாலை நிறைவடைகிறது. அதன் பிறகு, வெற்றியாளர்களின் முடிவு கள் அறிவிக்கப்படும்.

இந்த போட்டிக்காக நடிகர் அஜித் 15 நாட்கள் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT