தமிழ் சினிமா

'பிகில்' டீஸர் எப்போது? - தயாரிப்பாளர் பதில்

செய்திப்பிரிவு

'பிகில்' டீஸர் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. ஜாக்கி ஷெராஃப், நயன்தாரா, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், இன்னும் டீஸர் வெளியிடப்படவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட இசை வெளியீட்டு விழாவில் கூட டீஸர் திரையிடப்படவில்லை. தீபாவளிக்கு 'பிகில்' படத்துடன் வெளியாகும் 'கைதி' மற்றும் 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களின் டீஸர் வெளியிடப்பட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள்.

'பிகில்' டீஸர் எப்போது வெளியீடு என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மேலும், சிலர் அக்டோபர் 6-ம் தேதி மாலை 7 மணிக்கு வெளியீடு என போஸ்டர் வடிவமைப்பு செய்து, அதனை வெளியிட்டு வதந்திகளையும் கிளப்பி வருகிறார்கள்.

தற்போது டீஸர் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில், "அடுத்த வாரம் 'பிகில்' டீஸர் வெளியிட முயற்சி செய்து வருகிறோம். இந்த வாரம் கஷ்டம். கூடிய விரைவில் வெளியிட முயல்கிறோம். திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று டீஸர் வெளியாகும் தேதியை அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT