சிவாஜி பிரபு சாரிடீஸ் டிரஸ்ட் சார்பில் சிவாஜிகணேசனின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு விருது வழங்கும் விழாவில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கினார். (இடமிருந்து வலம்) விருது பெற்ற நடிகைகள் பி.எஸ். சரோஜா, டி.ராஜஸ்ரீ, நடிகர் ஏ.ஆர். ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவாளர் பாபு, இயக்குநர் விஜயகிருஷ்ணராஜ் ஆகியோருடன் பிரபு, ராம்குமார், பேரன்கள் ஸ்ரீ விஜி, ஸ்ரீமன், விக்ரம் பிரபு. துஷ்யந்த் உள்ளிட்டோர். இடம்: மியூசிக் அகாடமி, ஆழ்வார்ப்பேட்டை. படம்: ம.பிரபு 
தமிழ் சினிமா

நடிப்பில் உச்சத்தை தொட்டவர் சிவாஜி: 92-வது பிறந்த நாள் விழாவில் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை

நடிப்பின் உச்சத்தைத் தொட்ட ஜாம்பவான் சிவாஜி என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.

சிவாஜி பிரபு சாரிடீஸ் டிரஸ்ட் சார்பில் நடிகர் சிவாஜிகணேசனின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு விருது வழங்கும் விழா சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.

இதில் சிவாஜியுடன் நடித்த நடிகைகள் ராஜஸ்ரீ, வி.எஸ்.சரோஜா, நடிகர் ஏஆர்எஸ் ஸ்ரீனிவாசன், ஒளிப்பதிவாளர் பாபு, இயக்குநர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு ‘டாக்டர் சிவாஜி கணேசன் நினைவு விருது’ வழங்கப்பட்டன. மேலும் சிவாஜி ரசிகர் மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள் ஜி.நந்தகுமார், வி.எம்.ராமசாமி, ஆர்.ரங்கராஜன் ஆகியோருக்கு ‘நடிகர் திலகம் விருது’ வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன் ராம்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, விருதுகளை வழங்கி பேசும்போது, “தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் சிவாஜி. தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட ஜாம் பவான். அவர் அளவுக்கு வேறு யாரும் நடிப்பின் பல்வேறு பரி மாணங்களைத் தொட்டதில்லை. அதேநேரம் யதார்த்த வாழ்வில் மிகுந்த மனிதநேயமிக்கவர். அனை வரையும் மதிக்கும் பண்பு அவரி டம் இருந்தது ” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும் போது, ‘‘எல்லா காலக்கட்டத்திலும் தன் நடிப்பால் மக்களை கவரக்கூடி யவர் சிவாஜி. அவர் மட்டுமே முழு மையான நடிகர். சிவாஜி போல் இனி யொரு நடிகர் பிறக்கப் போவ தில்லை’’என்றார்.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசும்போது, ‘‘புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒரு கலைஞனை கவுரவிக்க வேண் டும். ஆனால், சிவாஜிக்கு பல விருது கள் தாமதமாகவே அளிக்கப்பட் டன. எனினும், ரசிகர்களின் அன் பைத்தான் சிறந்த விருதாக சிவாஜி கருதினார். நடிப்பின் சகாப்தமான சிவாஜியின் இடத்தை கலையுலகில் யாரும் நிரப்ப முடியாது’’என்றார்.

நடிகரும், சிவாஜி கணேசனின் மகனுமான பிரபு நன்றி கூறினார். சிவாஜி பேரன்கள் துஷ்யந்த், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT