தமிழ் சினிமா

மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நாயகியாகும் ப்ரியா பவானி சங்கர்

செய்திப்பிரிவு

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கவுள்ள படத்துக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. மே 17-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்றது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்துக்குப் பிறகு ராதா மோகன் இயக்கும் படத்தில் நாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் கதையைக் கேட்டுவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார் ப்ரியா பவானி சங்கர். அதனைத் தொடர்ந்து 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'மாஃபியா', 'கசடதபற' மற்றும் அஜய் ஞானமுத்து - விக்ரம் நடிக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் பட்டியலில் தற்போது ராதா மோகன் - எஸ்.ஜே.சூர்யா படமும் இணைந்துள்ளது.

SCROLL FOR NEXT