தமிழ் சினிமா

'பிகில்’ டீஸர் லீக்? மீண்டும் ஒரு சர்ச்சை

செய்திப்பிரிவு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகிவிட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் சிறுசிறு காட்சிகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதான காட்சிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான 'சிங்கப்பெண்ணே' இணையத்தில் லீக்கானது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அவசரமாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது 'பிகில்' பாடல் லீக்கானது என ட்ரெண்டாகத் தொடங்கியது. இதற்கு படக்குழு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 29) மாலை 'பிகில்' டீஸர் லீக்காகிவிட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து பலரும் இணையத்தில் இது தொடர்பாக விவாதிக்கத் தொடங்கினார்கள். 8 விநாடிகள் கொண்ட ட்விட்டர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இதர படங்களில் உள்ள ஃபுட் பால் விளையாடும் காட்சிகள் மற்றும் ஜாக்கி ஷெராஃப் காரில் போகும் காட்சி ஆகியவற்றை வைத்து தயார் செய்து, 'பிகில்' டீஸர் லீக்கானது என்று வெளியிட்டுள்ளனர். இதனைப் பலரும் நம்பி ஷேர் செய்யத் தொடங்கினர்.

இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் கேட்டபோது, "முதலில் படத்துக்கு டீஸர் வெளியிடும் எண்ணமில்லை. நேரடியாக ட்ரெய்லர் தான். அது இந்த வார இறுதிக்குள் வெளியாகும். தொடர்ச்சியாக இப்படி ட்ரெண்ட் செய்வது நல்லதல்ல" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT