விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘எங்கிட்ட மோதாதே’ கேம் ஷோ இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. விஜய் டிவியின் பல்வேறு மெகா தொடர் குழுவினரோடு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் 2 தொடர்களின் நடிகர்கள் போட்டியிடுகின்றனர். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடரில் இருந்து செந்தில், ரக்ஷா, ‘பாரதி கண்ணம்மா’வில் இருந்து ரோஷினி, அருண், அகில், ஸ்வீட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திவ்யதர்ஷினி (டிடி), தீனாவின் ஸ்பெஷல் நடனம், செந்தில் - ரக்ஷா, ரோஷினி - அருண், ‘ஆயுத எழுத்து’ தொடரில் நடிக்கும் ஸ்ரீது, மணி பிலினா ஆகியோரது நடனமும் இடம்பெறுகின்றன. இந்த விறுவிறுப்பான இறுதி வார நிகழ்ச்சியோடு ‘எங்கிட்ட மோதாதே’ கேம் ஷோ நிறைவடைகிறது.