தமிழ் சினிமா

ஆண் குழந்தைக்கு தாயானார் ஏமி ஜாக்சன்

செய்திப்பிரிவு

'மதராசப்பட்டினம்' மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஏமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் 'மதராசபட்டினம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 'ஐ', 'தங்கமகன்', 'தெறி', '2.0' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் 'ஏக் தீவானா தா', 'ஃப்ரீக்கி அலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் காதலர் ஜார்ஜ் பனாயிடூ என்ற தொழிலதிபருடன் வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கர்ப்பமான ஏமி ஜாக்சனுக்கு அடுத்தாண்டு இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனிடையே கர்ப்பத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார் ஏமி ஜாக்சன். இன்று (செப்டம்பர் 23) அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண்ட்ரியாஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் தனக்குப் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஏமி ஜாக்சன். முன்னதாக, வெளிநாடுகளில் என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை ஒரு விழா போலவே கொண்டாடி அறிவிப்பார்கள்.

அப்படியான ஒரு விழாவில் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு, தனக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் ஏமி ஜாக்சன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT