தமிழ் சினிமா

நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் உடன்பாடில்லை: ப்ரியாமணி 

செய்திப்பிரிவு

நெருக்கமான காட்சிகள் நடிப்பதில், பிகினி போன்ற ஆடைகள் அணிவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், சவுகரியம் இல்லை என்றும் நடிகை ப்ரியாமணி பேசியுள்ளார்.

'ஃபேமிலி மேன்' என்ற வெப் சீரிஸ் மூலமாக ஸ்ட்ரீமிங் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் ப்ரியாமணி. இந்தத் தொடரில் நடிகர் மனோஜ் பாஜ்பாயி நாயகனாக நடிக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்துள்ளார்.

இதையொட்டி ஐஏஎன்எஸ்ஸுக்கு ப்ரியாமணி அளித்துள்ள பேட்டியில், "எனது ஆரம்ப நாட்களில் படம் ஒன்றில் நான் நீச்சல் உடை அணிந்ததற்கு பலர் என்னை விமர்சித்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள், கவர்ச்சிகரமாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறீர்களா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. தென்னிந்திய ரசிகர்கள் பாலிவுட் ரசிகர்களை விட பாரம்பரியம் சார்ந்தவர்கள்.

இப்படிச் சொன்னாலும், தன்னம்பிக்கையுடன் நீச்சல் உடையில் நயத்துடன் தோன்றும் நடிகைகளை நான் பாராட்டுகிறேன். நான் அந்த உடையில் சவுகரியமாக இல்லை என்றே சொல்கிறேன். மேலும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பவர்களைப் பற்றி நான் தவறாகக் கூறவில்லை. ஆனால் ஒரு நடிகையாக ஒரு காட்சியில் முத்தமிடுவதோ, நெருக்கமாக நடிப்பதோ என்னால் முடியாது. நான் அதைச் செய்ய மாட்டேன் என்கிறேன்" என்று ப்ரியா மணி குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT