தமிழ் சினிமா

ஹாலிவுட் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

செய்திப்பிரிவு

தான் நடித்து வரும் தமிழ்ப் படங்களுக்கு இடையே, புதிதாக ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

சசி இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் ஜி.வி.பிரகாஷின் யதார்த்தமான நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் '100% காதல்' வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜி.வி. 'ஜெயில்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'காதலைத் தேடி நித்யானந்தா', 'காதலிக்க யாருமில்லை' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், புதிதாக ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்.

கைபா பிலிம்ஸ் சார்பில் டெல்கணேசன் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு 'டிராப் சிட்டி' என்று தலைப்பிட்டுள்ளனர். ரிக்கி பர்ச்செல் இயக்கி வரும் இந்தப் படத்தில் ப்ராண்டன் டி.ஜாக்ஸனுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிறுவனம் தான் நெப்போலியன் நடிப்பில் உருவான 'டெவில்ஸ் நைட்' மற்றும் 'கிறிஸ்துமஸ் கூப்பன்' ஆகிய ஹாலிவுட் படங்களைத் தயாரித்தது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT