தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. எப்போது வெளியீடு என்பது தெரியாமலே இருந்தது. ’பெட்ரோமாக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, தீபாவளி விடுமுறையைக் கணக்கில் கொண்டு விஜய் நடித்துள்ள 'பிகில்', கார்த்தி நடித்துள்ள 'கைதி' ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. அதோடு 'பெட்ரோமாக்ஸ்' படமும் இணைந்துள்ளது. இந்தப் படம் ஹாரர் காமெடி பாணியில் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்க, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற 'அனந்தோ பிரம்மா' படத்தின் ரீமேக் தான் 'பெட்ரோமாக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்