தமிழ் சினிமா

மூன்று கெட்டப்களில் சிவகார்த்திகேயன்

ஸ்கிரீனன்

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்ற இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், Weta நிறுவனம் ஏன் சிவகார்த்திகேயன் படத்துக்கு என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இப்படத்தில் வயதானவர், வாலிபர் மற்றும் பெண் வேடம் என மூன்று கெட்டப்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT