அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்துக்கு பல்லக் லால்வாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஃபியா'. இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ரஜினிகாந்த் இதன் டீஸரைப் பார்த்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 'மாஃபியா' பணிகளை முடித்துவிட்டதால், அடுத்ததாக ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்.
இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நாயகி இல்லாமல் இதன் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. தற்போது நாயகியாக பல்லக் லால்வாணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' படத்திலும் வைபவ் நடித்த 'சிக்சர்' படத்திலும் நாயகியாக நடித்தவர்.
இந்தப் புதிய படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இதற்கு ஷபீர் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்