மதுரை
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் பேனர்களை வைக்க மாட்டோம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழியேற்றுள்ளனர்.
சென்னையில் இளம் பெண் சுப பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத் தும் விதமாக பொது இடங்களில் பேனர்களை வைக்க மாட்டோம் என நடிகர் அஜித் ரசிகர்கள் உறுதி மொழி எடுத்து, அதுதொடர்பான சுவரொட்டி ஒட்டி உள்ளனர். அதில், சென்னையில் பேனர் விழுந்து சகோதரி சுப உயிரிழந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம். இனி எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கின்றோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.