தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
2015 2017 ம் ஆண்டுக் கான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதில் விக்ரமன் அணியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக யாரும் போட்டி யிடாததால் இயக்குநர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகி களின் பட்டியல் நேற்று அறிவிக் கப்பட்டது.
இயக்குநர் சங்கத் தலைவராக விக்ரமன், பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளா ளராக வி.சேகர், துணைத் தலைவர்களாக கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோரும், இணைச்செயலாளர்களாக பேரரசு, சுந்தர் சி, ஏகம்பவாணன், லிங்குசாமி, செகதீசன் ஆகி யோரும், செயற்குழு உறுப்பினர் களாக ரமேஷ்கண்ணன், மனோபாலா, நம்பிராஜன், வேல் முருகன், ராஜா கார்த்திக், திருமலை, ‘ஜெயம்’ ராஜா, ரவிமரியா, கமலக்கண்ணன், மூதுரை பொய்யாமொழி, சமுத்திரகனி, ஐந்துகோவிலான், மனோஜ்குமார், புவனா, ஆர்.கண்ணன், ஆர்.கே.கண்ணன், ஜீவா ஆகியோரும் தேர்ந்தெடுக் கப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது.