’ஆசை’ அஜித், சுவலட்சுமி (படம் உதவி: ஞானம்) 
தமிழ் சினிமா

 ‘’ ’ஆசை’ படத்துக்கு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’னுதான் டைட்டில் வைச்சேன்!’’   - இயக்குநர் வஸந்த் எஸ் சாய் பிரத்யேகப் பேட்டி

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


‘ஆசை’ படத்துக்கு முதலில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்றுதான் டைட்டில் வைத்தேன். பிறகு, ’ஆசை’ என்று டைட்டிலை ஓகே செய்தேன்’’ என்று இயக்குநர் வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.


’ஆசை’ படம் வெளியாகி, 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . அஜித்துக்கு மூன்றாவது படம் இது. அதேபோல் இயக்குநர் வஸந்திற்கும் மூன்றாவது படம். அஜித்துக்குக் கிடைத்த முதல் ஹிட் இந்தப் படம்தான்.


இதையொட்டி, இயக்குநர் வஸந்த் எஸ் சாய்க்கு, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும், ‘ஆசை 25’ குறித்து, வீடியோ பேட்டி அளித்தார் இயக்குநர் வஸந்த் எஸ் சாய்.


அதில் அவர் கூறியதாவது:


’ஆசை’ படத்துக்கு தேவா சார், அத்தனை அருமையாகப் பாடல்களைத் தந்தார். எனக்கு படத்தில் ஒரு பாட்டு, இரண்டு பாட்டு ஹிட்டாகவேண்டும் என்றெல்லாம் திருப்திப்பட்டுக்கொள்ளமாட்டேன். படத்தில் ஐந்து பாட்டு என்றால், அந்த ஐந்து பாட்டுகளும் ஹிட்டாக வேண்டும். ஆறு பாட்டு இருந்தால், ஆறு பாட்டுகளும் ஹிட்டாகவேண்டும்.


என்னுடைய ‘கேளடி கண்மணி’ படமாகட்டும், ‘நீ பாதி நான்பாதி’ ‘ஆசை’, நேருக்கு நேர்’,’ரிதம்’, ‘சத்தம் போடாதே’ என எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றிலுள்ள எல்லாப் பாடல்களும் ஹிட்டாகியிருக்கும்.


‘ஆசை’ என்று இந்தப்படத்துக்கு டைட்டில் வைப்பதற்கு முன்னதாக, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்றுதான் டைட்டில் வைக்கலாம் என்று யோசித்திருந்தேன். பிறகு ‘கண்ணே...’ என்று டைட்டில் வைக்கலாமா என்று யோசித்தேன். அதையடுத்துதான் ‘ஆசை’ என்று டைட்டில் வைத்தேன். அஜித் சுவலட்சுமி மீது வைத்திருப்பது காதல் ஆசை. பிரகாஷ்ராஜ் சுவலட்சுமி மீது கொண்டிருப்பது காம ஆசை. ஆகவே பொதுவாக, ‘ஆசை’ என்று டைட்டில் வைத்தேன்.


இவ்வாறு வஸந்த் எஸ் சாய் தெரிவித்தார்.


இயக்குநர் வஸந்த் எஸ் சாய் அளித்த வீடியோ பேட்டியைக் காண:

SCROLL FOR NEXT