தமிழ் சினிமா

சுந்தரனுக்கும் சுந்தரிக்கும் இனி காதல்

செய்திப்பிரிவு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ தொடரில் இத்தனை அத்தியாயங்களாக கீரியும் பாம்புமாக இருந்த தமிழரசி - வேல்முருகன் ஜோடி, இனி வரும் வாரங்களில் காதலர்களாக மாற உள்ளனர்.

வேல்முருகனாக ’கலக்கப் போவது யாரு’ சீசன் 8-ன் இறுதிப் போட்டியாளரான வினோத்பாபுவும், தமிழரசியாக தேஜஸ்வினியும், பாட்டியாக நடிகை லதாவும் நடித்து வருகின்றனர்.

ரத்த பந்தமான இரு குடும்பங்கள் சில பிரச்சினைகள் காரணமாக பிரிந்து வாழும் நிலையில் தமிழரசி - வேல்முருகன் இருவரும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளனர். இச்சூழலில் வேல்முருகனின் பாட்டிக்கு வரும் ஓர் ஆபத்தை தமிழரசி தடுத்து நிறுத்துகிறார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இருவருக்குக்குள்ளும் அன்பு மலர்ந்து, காதலாக மாறுகிறது. இதனால் பிரிந்த இருவரது குடும்பமும் ஒன்றுசேர வாய்ப்பு உண்டா என்பதும் இனி வரும் வாரங்களில் பிரதிபலிக்கும்.

SCROLL FOR NEXT