தமிழ் சினிமா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா

செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது.

'காலா' படத்துக்குப் பிறகு இந்தியில் பெரும் பொருட்செலவில் உருவாகும் 'பர்சி முண்டா' படத்தை இயக்கவிருந்தார் பா.இரஞ்சித். இதற்காக பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்து 'பர்சி முண்டா' குறித்த தகவல்களைச் சேகரித்து வந்தார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது படக்குழு.

இதனால் 'பர்சி முண்டா' படத்துக்கு முன்பாக, தமிழில் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்தார் பா.இரஞ்சித். பாக்ஸிங்கை மையப்படுத்தி தயார் செய்த அந்தக் கதையை பல்வேறு முன்னணி நாயகர்களிடம் கூறினார். ஆனால், இறுதியாக அப்படத்தில் நடிப்பதற்கு ஆர்யா சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தன் புதிய படத்துக்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளார் பா.இரஞ்சித். 'குரங்கு பொம்மை' படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் புதிய கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

          
SCROLL FOR NEXT