பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘30 மினிட்ஸ் வித் அஸ்’, ‘ஃபிலிம் நியூஸ்’ ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் அஞ்சலி. ‘‘கவனம் ஈர்க்கும் திரைப்படங்களின் வெற்றிப் பயணத்தை அரை மணி நேரத்தில் சொல்லும் சுவாரஸ்ய நிகழ்ச்சி ‘30 மினிட்ஸ் வித் அஸ்’. அதேபோல, ‘ஃபிலிம் நியூஸ்’ நிகழ்ச்சி மற்றொரு கோணத்தில் இருக்கும். சின்ன வயதில் இருந்தே, சினிமா பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ சினிமாக்களை பார்த்து அதுபற்றி பேசுவது, படக் குழுவினருடன் விவாதிப்பது எனும்போது, சுவாரஸ்யம், மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது’’ என்கிறார் அஞ்சலி.