பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையமாகக் கொண்ட திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. ’லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒரு காவல் அதிகாரிக்கும், அவருக்கு உணவு கொண்டு வரும் டெலிவரி பையனுக்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு கதை நகருமாம்.
படம் குறித்து லிப்ரா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறியதாவது: இப்படத்தை அழுத்தமான கதையுடன் வியாபார அம்சங்கள் நிறைந்ததாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஆர்டிஎம். இப்படத்தில் சுரேஷ் ரவி நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் என்றார்.