தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் த்ரிஷா!

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்க உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருந்ததும், கால்ஷீட் பிரச்சினையால் அவர்கள் விலக நேர்ந்ததும் பழைய செய்தி. இப்போது ஜெயம்ரவி, கார்த்தி, பார்த்திபன், அமலாபால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதுதான் புதிய செய்தி. வரலாற்று திரைக்களம் என்பதால் கலைஞர்களை தெரிவு செய்வதில் மணிரத்னம் பெரும் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிக்க, அதற்கு த்ரிஷாவும் பச்சைக்கொடி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் அவர் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிய வருகிறது.

SCROLL FOR NEXT