நடிகை ஸ்ரீதிவ்யா, ‘ரெமோ’, ‘மாவீரன் கிட்டு’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ ஆகிய படங்களுக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் தமிழில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று இரு துறைகளிலும் பயணிக்கும் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆன்டனி, அல்லு சிரிஷ் ஒப்பந்தமாகி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள்ளார். தண்ணீர், குளிர் பிரதேசம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு உருவாக உள்ள இப்படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதர்’ என்ற தலைப்பை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஆன்டனி தற்போது ‘காக்கி’, ‘அக்னி சிறகுகள்’ உள்ளிட்ட சில படங்களில் கவனம் செலுத்தி வருவதால் இதன் படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க உள்ளனர்.