அப்புகுட்டியும் வசுந்தராவும் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'வாழ்க விவசாயி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையை பொன்னிமோகன் இயக்கியுள்ளார். இதில் அப்புகுட்டியும் வசுந்தராவும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்தரூபிணி மற்றும் விஜயன், கராத்தே கோபாலன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்.
ரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜெய்கிருஷ் இசையமைக்கிறார். பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக் கொள்கிரார். யுகபாரதி, மணி அமுதவன், தமயந்தி ஆகிய மூவரும் பாடல்கள் எழுத காதல் கந்தாஸ் நடனம் அமைத்துள்ளார்.
'பால் டிப்போ' கதிரேசன் தயாரித்துள்ள 'வாழ்க விவசாயி' விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.