தமிழ் சினிமா

திரில்லரில் இணையும் விதார்த் - அஞ்சலி நாயர்

செய்திப்பிரிவு

விதார்த், அஞ்சலி நாயர், சென்றாயன் உள்ளிட்டோர் நடிக்கும் திரில்லர் திரைப்படத்தை புதுமுக இயக்குநர் மனோஜ் ராம் இயக்குகிறார். இவர் ஷக்தி சவுந்தரராஜனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

படம் குறித்து இயக்குநர் மனோஜ் ராம் கூறியபோது, ‘‘மர்மங்கள் நிறைந்த திரில்லர் படமாக இதை உருவாக்க உள்ளோம். சமகாலத்தின் முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து இப்படத்தின் கரு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை எழுதி முடித்ததுமே, விதார்த் தான் இதற்கு சரியான நாயகன் என்று எனக்குத் தோன்றியது. நடிகர் சந்தோஷும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முழு படப்பிடிப்பும் சென்னையில் மட்டுமே நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT