தமிழ் சினிமா

என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்: சுந்தர்.சி பேச்சு 

செய்திப்பிரிவு

தொடர்ச்சியாக பேய்ப் படங்கள், காமெடிப் படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்‌ஷன் படம் இயக்கவே ஆசை என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்தார்.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி விஷால், தமன்னா நடிப்பில் 'ஆக்‌ஷன்' படத்தை இயக்கி வருகிறார். 'மத கஜ ராஜா', 'ஆம்பள' படங்களைத் தொடந்து சுந்தர்.சி - விஷால் இணையும் மூன்றாவது படம் 'ஆக்‌ஷன்'.

ஆக்‌ஷன் படன் குறித்து இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, ''நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிவிடுவது எனது வழக்கம். எனக்கு அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. 'முறைமாமன்' படத்தின் இயக்குநராக அறிமுகமானபோது அது ஒரு ரீமேக் படம். ஆனால், அப்படத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன்.

'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி' என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிப் படம் செய்யும் இயக்குநராக்கிவிட்டார்கள். ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அருணாச்சலம்' என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.

தொடர்ச்சியாக பேய்ப் படங்கள், காமெடிப் படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்‌ஷன் படம் இயக்கவே ஆசை'' என்று சுந்தர்.சி. தெரிவித்தார்.

SCROLL FOR NEXT