விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று அழுத்தமாகத் தடம் பதித்தவர் விஜய் மில்டன். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலிசோடா', 'பத்து எண்றதுக்குள்ள', 'கடுகு', 'கோலிசோடா 2' படங்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு மழை பிடிக்காத மனிதர் என்று தலைப்பு வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜய் ஆண்டனி 'அக்னி சிறகுகள்', 'தமிழரசன்', 'காக்கி' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படங்களுக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் நடிப்பார். ஸ்ரீதிவ்யா கைவசம் இந்தப் படம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.