இயக்குநர் ரமேஷ் பாரதி, காமெடி கலந்த காதல் பின்னணியில் ‘பிஸ்தா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மெட்ரோ’ சிரிஷ் சரவணன், மிருதுளா முரளி, சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமும்கூட. இப்படத்தில் ‘அழகுல ராசாத்தி’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு நேற்று பிறந்தநாள். இந்நிலையில், அவரை வாழ்த்தும் விதமாக, இப்பாடலை நேற்று இணையத்தில் வெளியிட்டனர். இணையத்தில் வெளியானதில் இருந்தே, அந்த பாடல் மிகுந்த கவனம் ஈர்த்து வருகிறது.