பயனீர் மியூசிக் ஜிம் குழுவினர் 
தமிழ் சினிமா

இசைத் தொண்டே இறைவன் தொண்டு!

செய்திப்பிரிவு

வா.ரவிக்குமார்

இசை மகிழ்ச்சியை தரும்; கல்வி, ஆரோக்கியத்தை தருமா? ‘கட்டாயம் தரும்’ என்று கூறும் ‘பயனீர் மியூசிக் ஜிம்’ அமைப்பு, கடந்த 2016-ம் ஆண்டு முதல் இசை மூலமாக கல்வி, ஆரோக்கியத்தை வழங்கி வரு கிறது.

தமிழகம் முழுவதும் 550 கிரா மங்களில் 9 லட்சத்துக்கும் அதிக மான குழந்தைகளுக்கு கல்விக் கண்ணை திறந்திருப்பது ‘வித்யா ரம்பம்’ அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்காக சென்னை மியூசிக் அகாடமியில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது ‘பயனீர் மியூசிக் ஜிம்’ அமைப்பு.

‘கீரவாணி.. இரவிலே கனவிலே பாடவா நீ’, ‘காளிதாசன் கண்ண தாசன்.. கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம்’ என, இசை மேடை களில் கேட்பதற்கு அரிய, இனிய பாடல்களைப் பாடியவர்கள் தங்களது இசைத் திறமையால் ரசிகர்களை 1990-களுக்கே அழைத்துச் சென்றனர்.

உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி உதவுவதுபோல, மன ஆரோக்கியத்துக்கு இசைப் பயிற்சி உதவும். இதனால்தான் எங்கள் அமைப்பின் பெயரிலேயே ‘ஜிம்’ என்பதை சேர்த்தோம் என்கிறார் ‘பயனீர் மியூசிக் ஜிம்’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்.

இவர் பிரபல டிரம்மர். வெறுமனே பொழுதுபோக்குக் காக இசை நிகழ்ச்சி நடத்துவதை விட, இசையால் சமூகத்துக்கு ஏதேனும் பலன் கிடைக்க வேண் டும் என்ற நோக்கத்தோடு 15 உறுப்பினர்களுடன் ‘பயனீர் மியூசிக் ஜிம்’ அமைப்பை தொடங்கினார். தற்போது இதில் 85-க்கும் மேற்பட்டவர்கள் உறுப் பினர்களாக இருக்கின்றனர்.

வழக்கறிஞர், மருத்துவர், ஆடிட்டர், வங்கி ஊழியர், ஐ.டி. ஊழியர், பத்திரிகையாளர்கள், ஓய்வுபெற்றவர்கள், இல்லத்தரசி கள் பலருக்கும் நல்ல குரல் வளம் இருக்கும். ஆனால், மேடை ஏறி மைக் பிடித்துப் பாட வாய்ப்பு இருக்காது. அதுபோன்றவர்க ளுக்கு திரையிசைப் பாடல்கள் பாட வார நாட்களிலும், வார இறுதியிலும் பயிற்சி கொடுத்து அவர்களை மேடையேற்றுகிறார் சுரேஷ்.

‘‘முறையாகப் பயிற்சி செய்ய வும், பாடவும் ஆர்வம் இருக்க வேண்டும். தங்கள் கலை மூலம் சமூகத்துக்கு நன்மை செய்யும் எண்ணம் வேண்டும். எங்கள் அமைப்பில் இடம்பெற இந்த 2 தகுதிகள் இருந்தால் போதும்.

பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், பிரபல நிறுவனங்களின் உதவி யுடன் தன்னார்வ அமைப்புக ளுக்கு சென்று இசை நிகழ்ச்சி களை நடத்துகின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் 2 பிரம்மாண்ட மான இசை நிகழ்ச்சிகளை பெரிய அரங்குகளில் நடத்தி, அதில் வசூ லாகும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகி றோம். கடந்த ஆண்டு நிகழ்ச்சி மூலம் ‘மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா’ அமைப்புக்கு நிதி வழங்கினோம். எங்கள் நிகழ்ச்சிகள் மூலம் இது வரை பல்வேறு அமைப்புகளுக்கு ரூ.20 லட்சம் வரை உதவி இருக்கிறோம்’’ என்கிறார் சுரேஷ்.

இசைத் தொண்டே இறைவன் தொண்டு!

SCROLL FOR NEXT