தமிழ் சினிமா

சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம்

செய்திப்பிரிவு

சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் சந்தானம் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர் எழுத்தாளர் கார்த்திக் யோகி. இவர் சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாக உள்ள படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.

படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், ''இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். கன்டென்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் அளவில் இருக்கும். இது மிகவும் வித்தியாசமான கிரியேட்டிவான படம். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேற லெவலில் இருக்கும்'' என்றனர்.

இப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு படக்குழு அறிவிக்க உள்ளது. வெகுவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பெயரிடப்படாத இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'A1'படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT