த்ரிஷா | படம்: பு.க.ப்ரவீன் 
தமிழ் சினிமா

இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம்: த்ரிஷா 

செய்திப்பிரிவு

இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிகவும் அவசியம் என யுனிசெப் விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா தெரிவித்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவரான த்ரிஷா, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையையும் முடிக்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாகச் சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் த்ரிஷா பேசும் போது, "எனக்கு அஜித் எவ்வளவு பிடிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். நான் இன்னும் ’நேர்கொண்ட பார்வை’ படம் பார்க்கவில்லை. ஆனால் அவரைப் போன்ற ஒரு சூப்பர்ஸ்டார் இப்படியான படத்தில் நடித்ததற்குக் கண்டிப்பாகப் பெரிய பாராட்டுகள். படத்தின் செய்தி பலர் கண்களைத் திறந்துள்ளது.

நான் இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். கண்டிப்பாகப் படத்தைப் பார்ப்பேன். இப்படியான ஒரு முயற்சியை அவர் ஆதரித்ததற்கு அவரைப் பாராட்ட வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கண்டிப்பாகத் தேவை. அவர்கள் தான் நாளைய அரசியல்வாதிகள். அரசியல் பற்றி நாம் இங்குப் பேச வேண்டாம். ஆனால் ஓட்டுப்போடுவது முக்கியம். உங்களுக்கு யார் மீதி நம்பிக்கை இருக்கிறதோ அவருக்கு ஓட்டுப் போடுங்கள்.

இந்தியாவில் பாலியல் வன்முறைகளுக்குச் எதிராக கடுமையாக சட்டங்கள் மாற வேண்டும். அரபு நாடுகளில் தவறுகளுக்கு உடனடி தண்டனை தருவது போல நம் ஊரிலும் வர வேண்டும். அப்போதுதான் குற்றச்செயல்கள் குறையும்” என்று பேசினார் த்ரிஷா

SCROLL FOR NEXT