தமிழ் சினிமா

விஜய் பாடியிருக்கும் 'வெறித்தனம்' பாடல்: இணையத்தில் போலி பதிப்புகள் 

செய்திப்பிரிவு

அட்லீ, விஜய் இணையின் பிகில் திரைப்படத்திலிருந்து 'வெறித்தனம்' என்ற பாடல் லீக் ஆகிவிட்டதாக இணையத்தில் வெள்ளிக்கிழமை செய்திகள் பரவியது. ஆனால் அவை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

முன்னதாக 'பிகில்' திரைப்படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் கள்ளத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டு பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகவே அந்தப் பாடலை, தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிடும் நிலை வந்தது.

இந்தப் படத்தில் விஜய், 'வெறித்தனம்' என்றப் பாடலைப் பாடியுள்ளதாகவும், அந்தப் பாடலுக்கு விஜய்யின் குரல் நல்ல வித்தியாசத்தைக் கொண்டு வந்துள்ளது என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

வெள்ளிக்கிழமை அன்று, விஜய் பாடிய அந்தப் பாடல் லீக் ஆகிவிட்டது என சமூக வலைதளங்களில் பரபரப்புப் பற்றிக்கொண்டது. ஆனால் இது போலியான வடிவம் என்பது தெரியவந்தது.

ரசிகர்கள் பலரும் தயாரிப்புத் தரப்பு இது போன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT